தொகுதி மறுவரையறை: எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு இருக்காது- மத்திய மந்திரி கிரிராஜ் சிங்

தொகுதி மறுவரையறை மசோதாவில் எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்பட்டாது என்று மத்திய மந்திரி கூறினார்.
தொகுதி மறுவரையறை: எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு இருக்காது- மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
Published on

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மத்திய அரசு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் நிமித்தம் தயாரிக்கப்பட்ட 3 மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் சிறப்பு கூட்ட அமர்வில் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த சட்டத்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளன. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநி லங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றன. ஆனால் இந்த மசோதாக்களால் எந்த மாநிலத்துக்கும் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என உள்துறை மந்திரிஅமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு மிகப்பெரும் அநீதியாக இருக்கும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த பரபரப்பான சூழலில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது: “அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை (மகளிர் இட ஒதுக்கீடு) நிறைவேற்றுவார்கள். இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்காதவர்களுக்கு வீட்டில் உணவே கிடைக்காது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் எந்த மாநிலத்திற்கும் பாகுபாடு இருக்காது” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com