அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது
Published on

அயோத்தி,

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்கனவே நடந்து விட்டது. இந்நிலையில், கோவில் கட்டுமான பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி, ராமஜென்மபூமி இடத்தில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் என்ற சிறப்பு பிரார்த்தனை, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டதை பின்பற்றி, இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன்தாஸ் தெரிவித்தார். அவரும், இதர அர்ச்சகர்களும் இந்த சடங்குகளை நடத்துகின்றனர்.

பின்னர், அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com