அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது என்றும் இது 3½ ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது
Published on

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். பூமி பூஜைக்காக போடப்பட்ட கூடாரங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றும் இப்பணி நடந்தது. அவற்றை அகற்றி விட்டு சுத்தப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று கட்டுமான பணி தொடங்குகிறது. சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆண்டுகளில் கோவில் பணி முற்றிலும் முடிவடையும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோவில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலுக்கான திட்ட வரைபடம், ஒப்புதலுக்காக, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கட்டணமாக ரூ.2 கோடி செலுத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com