விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு அளிக்கிறது.
விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபட கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை அவர் செய்தார். இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மல்லையா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அத்துடன் அவா நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா மூலமாகவோ ஆஜராக பலமுறை சுப்ரீம் கோர்ட்டு வாய்ப்பளித்தது. எனினும் அவா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மாச் 10-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அந்த வழக்கு நாளை ஜூலை 11-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமாவு விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com