2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டி: எம்.பி. ஹேமா மாலினிக்கு நடிகை ராக்கி சாவந்த் பதில்

2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என எம்.பி. ஹேமா மாலினிக்கு நடிகை ராக்கி சாவந்த்பதில் அளித்து உள்ளார்.
2024-ம் ஆண்டு தேர்தலில் போட்டி: எம்.பி. ஹேமா மாலினிக்கு நடிகை ராக்கி சாவந்த் பதில்
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகில் நடிகையாக இருந்து அரசியல்வாதியான ஹேமா மாலினி மதுரா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், இந்த தொகுதியில் இருந்து நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட கூடும் என பரவிய யூகங்களுக்கு பதில் அளித்த ஹேமா மாலினி, நடிகை ராக்கி சாவந்த் கூட நாளை வரலாம் என கூறினார்.

இந்நிலையில், நடிகை ராக்கி சாவந்த் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும்போது, பிரதமர் மோடிஜி மற்றும் ஹேமா மாலினிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனது தோள்களில் பெரிய பொறுப்பை வைத்ததற்காகவும், இதற்கு தகுதியான நபர் என என்னை கவனத்தில் கொண்டதற்காகவும் பிரதமர் மோடிஜிக்கு நன்றி.

ஹேமா மாலினிஜி முன்பே அறிவித்ததுபோன்று, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என சாவந்த் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், சிறு வயது முதலே சமூகத்திற்காக நான் சேவை செய்து வருகிறேன். நாட்டுக்கு சேவை செய்யவே நான் பிறந்தேன். தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன். நம்முடைய பிரதமர், தேநீர் தயாரிப்பவராக இருந்து பிரதமராக முடியும்போது, பாலிவுட்டில் பணியாற்றி விட்டு நான் ஏன் ஒரு முதல்-மந்திரியாக முடியாது? நிச்சயம் என்னால் முடியும். அதற்காக உங்களது அனைவருடைய சிறந்த ஆசிகளும் தேவையாக உள்ளது என்று சாவந்த் கூறியுள்ளார்.

அதனால், 2024 தேர்தலில் நான் போட்டியிடுவேன். ஆனால், அது யாருக்கு எதிராக என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com