தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 774 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 774 பேருக்கு தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு , குஜராத், மாநிலங்களில் தலா ஒருவர் என 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,187 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாடு முழுவதும் கொரோனாவால் 5.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com