ராணுவ மந்திரியாக போர் நினைவு சின்னத்தில் தொடர்ந்து மரியாதை; ராஜ்நாத் சிங் பேட்டி

காஷ்மீரின் லே நகரில் அமைந்த போர் நினைவு சின்னத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
ராணுவ மந்திரியாக போர் நினைவு சின்னத்தில் தொடர்ந்து மரியாதை; ராஜ்நாத் சிங் பேட்டி
Published on

லே,

நாட்டின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரின் லே நகரில் ரெஜாங் லா பகுதியில் அமைந்த போர் நினைவு சின்னத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். அவர், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சீன படைகளை சேர்ந்த 1,200 பேரை கொன்று குவித்து உயிரிழந்த 114 வீரமிகுந்த ராணுவ வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இது ஒன்றும் சிறிய விசயமல்ல. நான் ராணுவ மந்திரியாக இருக்கும் வரை தொடர்ந்து இங்கு வருவேன். எனது மரியாதையை செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com