தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் நிகழ்வுகள் 11-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com