தொடர் மழை, நிலச்சரிவு; ஜம்முவில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு


தொடர் மழை, நிலச்சரிவு; ஜம்முவில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர் மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 14-ந்தேதி முதல் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வீடுகள், கட்டிடங்களை சுற்றி நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதில், கிஷ்த்வார், கதுவா, ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் மேகவெடிப்புகள், தொடர் மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் பலர் புனித யாத்திரை சென்றவர்கள். இதுதவிர, 120 பேர் காயமடைந்து உள்ளனர். 33 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை விடப்படுகிறது. இதனை பள்ளி கல்வி இயக்குநரகம் இன்று தெரிவித்து உள்ளது. ஜம்முவில் பருவநிலை மாறுபாடுகளால், இந்த வாரம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

இதேபோன்று, ஜம்முவில் ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளம் பாய்ந்து, தனியார் மற்றும் பொது மக்களின் சொத்துகள் சேதமடைந்தன.

1 More update

Next Story