பிரக்யா சிங், அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் வெற்றி

பிரக்யா சிங், அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
பிரக்யா சிங், அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் வெற்றி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக திகழ்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், போபால் தொகுதியில் 3 லட்சத்து 64 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை தோற்கடித்தார்.

பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com