அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: மகுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு

அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் கடந்த 28-ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி. மகுவா மொய்த்ரா எல்லை பாதுகாப்பு குறித்த தனது பொறுப்புகளை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது எனக்கூறி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டார்.
இந்நிலையில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த கோபால் சமந்தோ என்பவர் அங்குள்ள மனா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா மத்திய உள்துறை மந்திரிக்கு அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரியவை மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான கருத்து வெளியிட்டு உள்ளார் என தெரிவித்தார். இதை தொடர்ந்து மகுவா மொய்த்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.






