சர்ச்சை பேச்சு:பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு


சர்ச்சை பேச்சு:பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு
x

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல் மந்திரியுமான ஈஸ்வரப்பா கலந்து கொண்டார். ஈஸ்வரப்பா அப்போது பேசுகையில், "வங்கதேசத்தில் இந்துக்களின் மீது கை வைத்தால் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்" எனப்பேசினார். ஈஸ்வரப்பாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், ஷிமோகாவில் உள்ள கோட்டே காவல் நிலைய போலீசார், தாமாக முன்வந்து ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டும் விதமாக பேசியது, இரு தரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

1 More update

Next Story