சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பூர்வீக வீடு மதிப்பு ரூ.130 கோடி

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பூர்வீக வீடு மதிப்பு ரூ.130 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பூர்வீக வீடு மதிப்பு ரூ.130 கோடி
Published on

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பூர்வீக வீடு, டெல்லியில் ஆடம்பரமான சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த பிக்குராம் ஜெயினுக்கு விற்பனை செய்வதாக 1970-ம் ஆண்டு, சல்மான் ருஷ்டியின் தந்தை அனிஸ் முகமது ருஷ்டி ஒப்பந்தம் போட்டார். ஆனால் இதில் பிரச்சினை ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது.

இந்த வழக்கில் தீர்ப்பு, பிக்குராம் ஜெயினுக்கு ஆதரவாக அமைந்தது. அவரிடம் அந்த வீட்டை சந்தை விலைக்கு சல்மான் ருஷ்டி குடும்பத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்றும், சந்தை விலையை டெல்லி ஐகோர்ட்டு நிர்ணயித்து கூற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அந்த வீட்டின் சந்தை மதிப்பு ரூ.130 கோடி என டெல்லி ஐகோர்ட்டு மதிப்பிட்டு கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com