பேருந்தில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வீடியோ சர்ச்சை - காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்காரெட்டி விளக்கம்

ஒரு கல்லூரி மாணவியின் கை மற்றும் இடுப்பை தொட்டு எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மல்ரெட்டி ரங்கா ரெட்டி விளக்கம்
Published on: 

இப்ராஹிம்பட்டினம்,

பேருந்தில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சை

தெலுங்கானா இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்கா ரெட்டி அரசு பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்தார். அப்போது அங்கு அருகில் நின்ற ஒரு கல்லூரி மாணவியின் கை மற்றும் இடுப்பை தொட்டு அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த செயலுக்கு எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மல்ரெட்டி ரங்கா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தனது சொந்த மகளை போன்ற பிள்ளைகளிடம் தான் காட்டிய அன்பை, எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார். தனக்குப் பெண்கள் மீது அதிக அளவில் மரியாதையும் மதிப்பும் இருப்பதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ மல்ரெட்டி ரங்காரெட்டி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com