மக்களை மதமாற்றம் செய்த போதகர்கள் உள்பட 15 பேர் கைது

மக்களை மதமாற்றம் செய்த போதகர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களை மதமாற்றம் செய்த போதகர்கள் உள்பட 15 பேர் கைது
Published on

பெங்களூரு: தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதில் ஒரு நபர் தனது மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வற்புறுத்தி உள்ளார். மேலும் அவர் மதம் மாறவில்லை என்றால், தன்னுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அந்த பெண் தனது சமூக மக்களிடம் முறையிட அவர்கள் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பேரில் போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதபோதகர்கள், ஒரு ரவுடி உள்பட 15 பேர் தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com