அரசுப் பள்ளியில் தலித் சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திய சமையல்காரர் கைது!

ராஜஸ்தானில், தலித் சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திய சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளியில் தலித் சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திய சமையல்காரர் கைது!
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் உதய்பூரில், தலித் சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியதற்காக சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.

பரோடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குர்ஜார் என்பவர் சமைத்த மதிய உணவை, தலித் பெண்கள், மாணவர்களுக்கு பரிமறியதாக கூறப்படுகிறது. இதற்கு லால் ராம் எதிர்ப்பு தெரிவித்தார்.

சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம், தலித்துகளால் பரிமாறப்பட்டதால், அதைத் தூக்கி எறியுமாறு லால் ராம் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் லால் ராம் அறிவுறுத்தலைப் பின்பற்றி உணவை வீசினர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.அவர்களது உறவினர்கள் சிலர், பள்ளிக்கு வந்து, சமையல்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

போலீசாரின் விசாரணையில், சமையற்காரர் லாலா ராம் குர்ஜார் தான் விரும்பும் மாணவர்களை அழைத்து, பெரும்பாலும் உயர்சாதியை சேர்ந்த மாணவர்களை கொண்டு பிற மாணவர்களுக்கு உணவை பரிமாறச் சொல்வது வழக்கம். ஆனால் நேற்று, ஒரு ஆசிரியர் தலித் சிறுமிகளை கொண்டு உணவு பரிமாறச் சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த சமையற்காரர் தலித் சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளியில் இரண்டு தலித் சிறுமிகளிடம் பாகுபாடு காட்டிய சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com