சமையல் எண்ணெய் கையிருப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆய்வு

சமையல் எண்ணெய் கையிருப்பு குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆய்வு நடத்துகிறது.
சமையல் எண்ணெய் கையிருப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆய்வு
Published on

புதுடெல்லி,

உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலைகளை கட்டுக்குள் வைக்கும் வகையில், குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு சிரமம் இன்றி சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் கிடைப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை 2 முறை குறைத்ததுடன், அவற்றை எண்ணெய் வர்த்தகர்கள் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் விதித்தது. அந்தவகையில் அந்தந்த மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் இந்த கையிருப்பு வரையறையை மாநிலங்களே முடிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை நிலவரங்களையும், உள்நாட்டு வினியோக நிலவரங்களையும் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எண்ணெய் தடையின்றி கிடைப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள கையிருப்பு குறித்து மத்திய அரசுகளுடன் இன்று (திங்கட்கிழமை) காணொலி மூலம் ஆய்வு நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com