நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களிடையே ஒத்துழைப்பு அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்

இளம் வழக்கறிஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 600 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது;-

"நீதித்துறையை வலுப்படுத்துவதற்கும், எதிர்கால சவால்களை தாங்கக்கூடியதாக மாற்றுவதற்கும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே அதிக ஒத்துழைப்பு என்பது அவசியமாகிறது. அனைத்து வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்க வேண்டும்.

சட்ட வல்லுநர்களாக, சட்ட அமைப்பில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பெண் வழக்கறிஞர்களுக்கு கணிசமான ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குவது சட்டத் தொழிலில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் அரசியலமைப்பு கடமையாகும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com