

அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், அரசு அலுவலகங்களை சுமுகமாக இயங்கச் செய்ய வேண்டும் என்று அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, 2 டோஸ் கொரோனா தடுப்பூசியையும் முழுமையாக போட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ந்து பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வரும் அரசு ஊழியர்கள், கொரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகத்துறை ஆணையர் மணிவண்ணன் கூறியுள்ளார்.