

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 3வது அலை வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என அதுபற்றி தேசிய பேரிடர் மேலாண் மையம் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சூழலில், கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது.
இதுபற்றி டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் மருத்துவர் திரேன் குப்தா கூறும்போது, கொரோனா 3வது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதனால், குழந்தைகள் கொரோனா 3வது அலையில் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.