மத்திய பிரதேசத்தில் இன்று 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இன்று 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 11,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 66 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,491 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 6,497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,452 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 63,889 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com