கேரளாவில் புதிதாக 13,772 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 142 பேர் பலி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,772 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 13,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30.25 லட்சமாக உயர்ந்துள்ளது.

மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 142 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,250 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 11,414 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29,00,600 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,10,136 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com