மராட்டியத்தில் இன்று புதிதாக 3,282 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 35 பேர் பலி

மராட்டியத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 42 ஆயிரத்து 136 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 064 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 999 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ளனர். இதன்மூலம் குண்மடைவோர் விகிதம் 94.59 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் தற்போது 54 ஆயிரத்து 317 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் மேலும் 35 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 49 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இறப்பு விகிதம் 2.56 சதவீதமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com