இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: கேரளாவில் அதிகம்


இந்தியாவில்  4 ஆயிரத்தை நெருங்கியது  கொரோனா பாதிப்பு: கேரளாவில் அதிகம்
x
தினத்தந்தி 3 Jun 2025 7:59 AM IST (Updated: 3 Jun 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.நேற்றைய நிலவரப்படி நாட்டில் 3 ஆயிரத்து 961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனைத்தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட நேற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய கொரோனா பரவலில் உயிர்ப்பலி எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 32 ஆக அதிகரித்து உள்ளது. நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story