கொரோனா பாதிப்புகள்: ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு

கொரோனா பாதிப்புகளுக்காக, ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள்: ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு
Published on

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் பல சிக்கன நடவடிக்கைகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை, ஒரு வருடத்திற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சொகுசு கார் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசிடம் உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ளப்படும். வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும். நிகழ்ச்சிகளில் குறைந்தளவு விருந்தினர்கள் அழைக்கப்படுவதுடன், அதன் மூலம் சமூக இடைவெளி கடைபிடிப்பது, பூக்கள், அலங்காரம், உணவு ஆகியவற்றின் தேவை குறைக்கப்படும். செலவை குறைக்கும் வகையில் உள்நாட்டு பயணத்தை குறைத்து கொள்ளவும், தொழில்நுட்ப உதவியுடன் மக்களை சந்திக்கவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தனது மார்ச் மாத ஊதியத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com