

புனே,
உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கொரோனா பரவல் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 12,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன.