சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,666 பேருக்கு கொரோனா

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,52,362 ஆக அதிகரித்துள்ளது
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,666 பேருக்கு கொரோனா
Published on

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 12,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,52,362 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,310 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 1,23,835 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com