

திருவனந்தபுரம்,
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 35,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,72,573 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 29,318 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,4,72,951 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 4,23,514 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.