கொரோனா பாதிப்பு; மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் 330க்கும் மேற்பட்டோர் மரணம்

கொரோனா பாதிப்புகளுக்கு மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் 330க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு; மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் 330க்கும் மேற்பட்டோர் மரணம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த 2வது அலை பரவ தொடங்கியதிலிருந்து, மார்ச் 3வது வாரத்தில் 35%க்கு கூடுதலான தொற்று பாதிப்புகளும், 40%க்கு கூடுதலான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

மத்திய ஆயுத படைகளில் மிக பெரிய அளவிலான மத்திய ரிசர்வ் காவல் படையில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இந்த ஆண்டு ஜூலை 6ந்தேதி வரை 84,045 மத்திய காவல் படை வீரர்கள் (சி.ஏ.பி.எப்.) பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 24,840 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா தொற்றால் சி.ஆர்.பி.எப். 125 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com