கொரோனா பாதிப்பு; மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்

மராட்டியத்தின் மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு; மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
Published on

மும்பை,

இந்தியாவில் இன்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. மராட்டியத்தில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கையானது அதிக அளவில் உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,326 ஆகவும், பலி எண்ணிக்கை 4,935 ஆகவும் நேற்று உயர்ந்திருந்தது. இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 57,152 ஆக உயர்ந்திருந்தது. 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மராட்டியத்தின் மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இவர்களில், 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் தீவிர பாதிப்புக்கு ஆளானவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளனர். இதுவரை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர் தங்களது 14 நாள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com