

விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை இதுவரை 14 லட்சத்து ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. அவர்களில் 11 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9,271 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கிற்கு உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.