கொரோனா எதிரொலி; அரியானாவில் கல்லூரி, பல்கலை கழகங்களை வரும் 12ந்தேதி வரை மூட உத்தரவு

அரியானாவில் கொரோனா உயர்வை முன்னிட்டு கல்லூரி, பல்கலை கழகங்கள் வரும் 12ந்தேதி வரை மூடப்படுகிறது.
கொரோனா எதிரொலி; அரியானாவில் கல்லூரி, பல்கலை கழகங்களை வரும் 12ந்தேதி வரை மூட உத்தரவு
Published on

சண்டிகார்,

அரியானாவில் 577 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், மொத்த பாதிப்பு 7,74,917 ஆக உயர்வடைந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டும் அரியானா உயர்கல்வி துறை நேற்று (ஞாயிற்று கிழமை) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, அனைத்து பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகள் (அரசு அல்லது தனியார்) வரும் 12ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். எனினும், வழக்கம்போல் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கலாம். வகுப்புகள் ஒழுங்காக நடைபெறுகிறது என முதல்வர்கள் உறுதி செய்வார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். பல்கலை கழகங்களில் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com