பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை

பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

யுனைட்டெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் அல்லது யுபிஐ என்று அழைக்கப்படும் டிஜிட்டல் வசதி வழியாக பணம் செலுத்தும் முறை தற்போது நாட்டில் பரவலாக உள்ளது. இந்த முறையில் ஒரு நபரின் யுபிஐ ஐடி இருந்தால் அவருடைய வங்கி கணக்கில் நேடியாக பணம் செலுத்தலாம். தற்போது சிலர் இதையும் தவறான முறையில் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட துவங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் நாடு தழுவிய அளவில் கொரோனா நிவாரண நிதிக்காக பிரதம மந்திரி பெயரில் PM CA-R-ES FU-ND என்ற யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பலரும் நேரடியாக நன்கொடை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முறைகேடான முறையில் PM CA-RE FU-ND என்ற பெயரில் போலி யுபிஐ கணக்கு ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. யுபிஐ கணக்கு pm-c-a-res@sbi என்பதே சரியான யுபிஐ கணக்கு என்று மத்திய அரசு டுவிட்டர் மூலம் தெரிவித்து உள்ளது.

s என்ற ஒரு எழுத்தை மட்டும் தவிர்த்து pm-c-a-re@sbi என்று இருப்பது போலி கணக்கு என்றும், எனவே மக்கள் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டுமென்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com