கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,54,456 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 613 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 45,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 3,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,850 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com