மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,16,984 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,452 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 32,836 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று அதிகபட்சமாக 4,431 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 3,76,696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com