ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,88,423 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,80,261 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,159 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,236 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,42,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து இன்று 493 குணமடைந்தனர். இதுவரை மொத்தமாக 9,24,304 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 5,959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com