நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் ஒரே நாளில் 21,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையின் சமீப நாட்களாக வெகுவாக பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 21,257 (நேற்று 22,431) பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால், தொற்று வித்தியாசம் நேற்றைய பாதிப்புகளை விட ஆயிரம் பேருக்கு மேல் குறைவாக காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312ல் இருந்து 3,39,15,569 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 24,963 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இது (நேற்று 24,602) ஆக இருந்தது. இதனால், சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை 3,32,00,258ல் இருந்து, 3,32,25,221 ஆக உயர்வடைந்து உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவீதம் ஆக உள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 271 (நேற்று 318) பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,49,856ல் இருந்து 4,50,127 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது.

நாடு முழுவதும் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று 2,44,198 பேராக இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com