

புதுச்சேரி,
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 50 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.