மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று 3,729 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 3,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,58,282 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 72 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,897 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 3,350 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை 18,56,109 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் 51,111 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com