கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடக மாநிலத்தில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,24,898 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இன்று 7 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,131 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 812 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை 9,03,629 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது கர்நாடகத்தில் 9,119 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com