கேரளாவில் இன்று 5,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரள மாநிலத்தில் இன்று 5,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 5,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,84,489 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று 24 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,184 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 63,802 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 7,17,311 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com