

இந்நிலயில் இமாசலபிரதேச மாநில அரசு செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக நேற்று கூறும்போது, 5ஜி தொழில்நுட்பத்தையும், கொரோனா தொற்று பரவலையும் தொடர்புபடுத்தும் தகவல்கள் தவறானவை. 5ஜி தொழில்நுட்ப சேவைக்கும், கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. நாட்டில் எங்குமே இதுவரை 5ஜி நெட்வொர்க் பரிசோதனை தொடங்கவில்லை. எனவே, 5ஜி நெட்வொர்க் அல்லது அதற்கான சோதனை நடவடிக்கைதான் இந்தியாவில் கொரோனா பரவலுக்கு காரணம் என்பதில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.