மராட்டியத்தில் மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை

மராட்டியத்தில் மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,30,861 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 278 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,758 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 16,835 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 11,34,555 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 2,58,108 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com