கொரோனா பெருந்தொற்று; சர்வதேச பொருளாதார மீட்சிக்கு யோசனை கூறிய பிரதமர் மோடி

சர்வதேச அளவில், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னான பொருளாதார மீட்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பு ஒரு பயனுள்ள பங்காற்றும் என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று; சர்வதேச பொருளாதார மீட்சிக்கு யோசனை கூறிய பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. நடப்பு ஆண்டில், சீனா தலைமையில் 14வது பிரிக்ஸ் மாநாடு இன்று பீஜிங்கில் தொடங்கியது.

இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் விடுத்துள்ள அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று கலந்து கொண்டார். அவருடன் ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனேரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசும்போது, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் வழியே பல துறைகளில் குடிமக்கள் பலன் பெற்றுள்ளனர். பிரிக்ஸ் இளைஞர் மாநாடு, பிரிக்ஸ் விளையாட்டு, மக்கள் சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு அதிகரிப்பதன் வழியே நம்முடைய மக்களுக்கு இடையேயான தொடர்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம்.

சர்வதேச அளவில், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னான பொருளாதார மீட்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பு ஒரு பயனுள்ள பங்காற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் (ஜூன் 21) பங்கேற்ற நாடுகளுக்கு பிரதமர் மோடி தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com