செல்ல நாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொரோனா விதிமீறல்; 3 பேர் கைது

குஜராத்தில் கொரோனா விதிகளை மீறி செல்ல நாய் பிறந்த நாளை கேக் வெட்டி, கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்ல நாய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கொரோனா விதிமீறல்; 3 பேர் கைது
Published on

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் மதுவன் கிரீன் பார்ட்டி பகுதியில் வசித்து வருபவர் சிராக் என்ற டேகோ பட்டேல். இவரது சகோதரர் ஊர்விஷ் பட்டேல். இவர்கள் இருவரும் நண்பர் திவ்யேஷ் மெஹாரியாவுடன் இணைந்து நேற்றிரவு தங்களுடைய அபி என்ற செல்ல நாயின் பிறந்த நாளை கோலாகலமுடன் கொண்டாடியுள்ளனர்.

இதில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என அதிகளவிலானோர் கலந்து கொண்டுள்னர். இந்த நிகழ்ச்சியில், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் ஆகிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

இதுதவிர, பிரபல நாட்டுப்புற பாடகர் ஒருவரையும் வரவழைத்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த தகவல் போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து தொற்று நோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com