இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்தது. ஆனால் நேற்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 12,213 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 6,594 நேற்று 8,822 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,213 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,32,45,517 லிருந்து 4,32,57,730 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 7,624 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,67,088 லிருந்து 4,26,74,712 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் பலியாகினர். இதுவரை 5,24,803 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,637 லிருந்து 58,215 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 195.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,21,942 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com