கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 47,754 பேருக்கு தொற்று..!

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,486 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,93,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களுருவில் மட்டும் 30,540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com