ஆந்திராவில் கொரோனா பாதிப்பு: 4 பேர் பலி -12 பேருக்கு சிகிச்சை

கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுக வேண்டும் என ஜி.வீரபாண்டியன் கூறினார்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு: 4 பேர் பலி -12 பேருக்கு சிகிச்சை
Published on

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜி.வீரபாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு

ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தீவிர உடல்நலப் பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் அச்சப்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப் பிடிக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com