மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு

மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பற்றி மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.
மும்பை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; மேயர் ஆய்வு
Published on

மும்பை,

மராட்டியத்தில் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மும்பை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கொரோனா தடுப்பு பற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் கிஷோரி பட்னாகர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, விமான நிலையத்தில் வந்து இறங்கும் ஒவ்வொரு பயணியையும் பரிசோதனை செய்கிறோம் என்று அதிகாரிகள் என்னிடம் கூறினர். பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம். மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com