இந்தியாவில் கொரோனா மாதிரி பரிசோதனைகள்; 40 கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை

இந்தியாவில் இதுவரை 40 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா மாதிரி பரிசோதனைகள்; 40 கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை
Published on

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் இதுவரை 40 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கடந்த 1ந்தேதி வரை நாட்டில் 35 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஜூன் 25ந்தேதியுடன் இந்த எண்ணிக்கை 40 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரத்து 892 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் இயக்குனர் ஜெனரல் மற்றும் பேராசிரியரான மருத்துவர் பல்ராம் பார்கவா கூறும்பொழுது, இந்தியாவில் பரிசோதனை, தேடுதல், கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொழில் நுட்ப பயன்பாடு என 5 வகையான அணுகுமுறைகள் திறமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில், இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடெங்கும் புதிதாக 48 ஆயிரத்து 698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.

5,95,565 பேர் சிகிச்சையில் உள்ளனர். 64,818 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாடு முழுவதும் 2,91,93,085 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com